மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2.80 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
Kerosene
Kerosene

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு 1.30 ரூபாய் முதல் 2.80 வரை உயர்த்தப்பட உள்ளதாக தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை உயர்வு:

அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் மலிவு விலையில் சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கேஸ் சிலிண்டர் இல்லாத குடும்பத்திற்கு தலா 3 லிட்டர் மண்ணெண்ணையும், 1 கேஸ் சிலிண்டர் வைத்திருந்தால் 2 லிட்டர் மண்ணெண்ணையும் வழங்கப்படுகிறது. இது எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் இது வழங்கப்படுகிறது. தற்போது அதன் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் ரூ.13.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ration shop
ration shop

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

இந்நிலையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வரும் அக்டோபர் 1 முதல் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 ரூபாய் முதல் 2.80 வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு லிட்டர் குறைந்தபட்சம் 15 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.16.50 வரை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் இருந்து மண்ணெண்ணெய் கொள்முதல் செய்யப்படும் நிலையத்திற்கு இருக்கும் தூரத்தை வைத்தும் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு உத்தரவால் முறையான வருமானம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here