தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்., பிப்ரவரி மாதத்துக்குள் இத செய்யணும்? இல்லனா பெயர் நீக்கப்படும்?

0

ரேஷன் அட்டைகளில் உள்ள உறுப்பினர்களை உறுதி செய்யும் நடைமுறையை, சில மாதங்களாக மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நடைமுறை தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த நடைமுறை மீண்டும் வந்துள்ளதாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து, விரல் ரேகையை பதிவிட வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி செய்யாவிட்டால், அந்த பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழக குடும்ப அட்டைதாரா்கள் பலரும் பெரும் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here