இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – தமிழ்நாடு 3வது இடம்!!

0
Coronavirus on scientific background

கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது தமிழகம் 3வைத்து இடத்தை பிடித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிரா முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கையில் தற்போது தமிழகம் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

3ம் இடத்தில தமிழகம்:

2019ம் ஆண்டு துவங்கி தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. தற்போது கொரோனாவின் தாக்கம் தீவிரமாகியுள்ளது. பல லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.

அனால் அதேசமயம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் 13 மாநிலங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் குறிப்பாக 6 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் கொரோனா தோற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களில் கர்நாடக முதல் இடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் மேலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here