தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஓய்வூதியம்? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது? பரபரப்பு தகவல்!!!

0

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள பலரும் பணி நிரந்தரம் கோரி மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நல பணியாளர் அமைப்பின் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான சலுகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் போராட்டத்தை தொடர்ந்ததால், பணியாளர்களை கலைந்து போக கூறி காவல் துறையினர் வலியுறுத்தினர். அதை அலட்சியப் படுத்தும் நோக்கில் போராட்டக்காரர்கள் நடந்து கொண்டதால் போராட்டக்காரர்களை கைது செய்து ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக மக்களுக்கு மழை அறிவிப்பு., இந்த தேதிகளில் உஷாராகிக்கோங்க., வானிலை மையம் அதிரடி அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here