தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை – மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!!

0
தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை - மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!!
தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை - மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!!

கல்வி கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அச்சச்சோ.., என்னது இது இப்படி தொங்குது?? அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

கடும் எச்சரிக்கை:

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், பள்ளி கட்டணம் செலுத்தாத தனியார் பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை அண்மையில், தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.

தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை - மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!!
தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை – மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!!

இந்த நிலையில், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை வெளியே நிற்க வைப்பது, பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here