பொங்கல் சிறப்பு  தொகுப்பு.., திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்!! பணம் தருவாங்களா?? மாட்டாங்களா?? 

0

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திட்டம் துவக்கம்:

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் சாமான்கள், பணப்பரிசு மற்றும் கரும்பு துண்டு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பொங்கல் பொருட்களோடு சமையல் பொருட்களான உப்பு, பருப்பு வகைகள், புளி, மஞ்சள் தூள் மற்றும் நெய் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது.

அந்த வகையில், இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்துள்ளார். இதனால், தமிழகத்தில் உள்ள 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளதை அடுத்து, பணப்பரிசு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. கடந்த ஆட்சியில் 2,500 ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இது பற்றி தற்போது வரை எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here