சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை, கல்வி ரீதியாக பலரும், தங்களது சொந்த ஊர்களை விட்டு தங்கி வருகின்றனர். இவர்கள் பண்டிகை உள்ளிட்ட தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வர ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்ப 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த பண்டிகை நாட்களுக்கான முன்பதிவு டிக்கெட்டை நாளை (செப்டம்பர் 13) முதல் விநியோகிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.3.14 லட்சம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!