தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கேரளாவில் நிபா வைரஸ் நோயும் வீரியம் எடுத்து வருவதால், இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது அவர் கூறுகையில், “மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வருவது வழக்கம் தான். அடுத்த 3 மாதங்களுக்கு பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல் நிபா வைரஸ் நோயால் தமிழகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதால், எவரும் அச்சப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.
ஐயோ.., என்னால சீமானை ஒன்னும் செய்ய முடியாது.., தோல்வியை ஒப்புக் கொண்ட விஜயலக்ஷ்மி – புகார் வாபஸ்!!