பேரிடர் காலத்தில் மக்கள் ஆபத்துகள் குறித்து தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம் – அமைச்சர் தகவல்!!!

0

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பேரிடர் காலங்களில் தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் நிகழும் ஆபத்துகள் குறித்தான விவரங்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண்  மற்றும் இணைய வாயிலாக தகவல் பதிவு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேரிடர்கள் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், புகைப்படம் எடுத்து அனுப்பும் வகையிலும் 24 மணி நேரமும்  இயங்கும் மாநில  அவசரக்  கட்டுப்பாட்டு  மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்ஸ் அப் எண். 9445869848  துவக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு  வாட்ஸ் அப் மூலம் வரப்பெறும் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் Citizens Corner என்ற அம்சம் புகுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தவிர பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் அனுப்ப TASMART செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here