தமிழகத்தின் 26 வது ஆளுநரானார் ஆர்.என்.ரவி – தலைவர்கள் வாழ்த்து!

0
தமிழகத்தின் 26 வது ஆளுநரானார் ஆர்.என்.ரவி - தலைவர்கள் வாழ்த்து!
தமிழகத்தின் 26 வது ஆளுநரானார் ஆர்.என்.ரவி - தலைவர்கள் வாழ்த்து!

தமிழகத்தின் 26 வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

பதவி பிரமாணம்:

தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் செல்ல இருப்பதாகவும், இதற்கு முன்னால், ஏற்கனவே பஞ்சாப் பொறுப்பு ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் இருந்த இவர் தற்போது நிரந்தரமாக அங்கு செல்ல இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை அடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமிக்கப்பட்டார். விரைவில் இவர் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் 26 வது ஆளுநரானார் ஆர்.என்.ரவி - தலைவர்கள் வாழ்த்து!
தமிழகத்தின் 26 வது ஆளுநரானார் ஆர்.என்.ரவி – தலைவர்கள் வாழ்த்து!

இதற்கு முன்னால் அவர் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்தது குறிப்பிடத் தகுந்தது. இதுமட்டுமில்லாமல், இவர் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராகவும் இருந்தது கவனிக்க தகுந்தது. அவரின் புதிய வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்தின் 26 வது ஆளுநராக ஆர் என் ரவி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here