தமிழகத்தில் அமலாகுமா மினி லாக்டவுன்?? முதல்வரின் அறிவிப்பை இன்று எதிர்பார்க்கும் பொது மக்கள்!!

0

தமிழகத்தில் பெருந்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசனை செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று அறிவிப்பு :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில், 1 முதல் 8 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட தொடர்ந்து வரும் அடுத்தடுத்த பண்டிகைகளால் தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதையடுத்து மருத்துவ அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தில் மினி லாக்டவுனை அமல்படுத்தலாமா? என்பது குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்று மாலை, முதல்வர் வாயிலாக  அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here