தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கா?? முதல்வரின் அறிவிப்பை எதிர்நோக்கும் பொதுமக்கள்!!

0

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி அமலில் உள்ளது. மேலும், வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேற்று முதல் அமலாகி வாரம் தோறும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது மற்றும்  கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி  முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு, பண்டிகை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் அறிவிப்பை, தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here