தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – பொது போக்குவரத்து மற்றும் பண்டிகை கால விதிமுறைகள் வெளியீடு!!

0
"தமிழக மக்கள் எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்" -  ஊரடங்கு பற்றி சூசகமாக பேசிய சுகாதாரத்துறை செயலாளர்!!

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற ஜனவரி 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் :

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,68,063 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போக டெல்டா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளது.

இதனை அடுத்து, இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து கடந்த 2 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். தற்போது, பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி முதல்வர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

  1. தமிழகத்தில் வருகிற ஜனவரி 31ஆம் தேதி வரை தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே அமலில் உள்ள வார இறுதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.
  4. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களிலிருந்து பயணம் செய்யும் மக்களின் வசதிக்காக, பொதுப் போக்குவரத்துகளில் 75% பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கலுக்கான சிறப்பு பேருந்து இன்று முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. இது போக, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில், தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here