தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்??

0

அக்டோபர் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இம்முறை கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. கிராமப்புற வாராந்திர உள்ளூர் சந்தைகள் மற்றும் அரசு பயிற்சி நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுவரை 5,91,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் மேலும் சில தளர்வுகளுடன் அக்டோபர் 31 நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

என்னென்ன தளர்வுகள்??

  • ஊரக, நகர் பகுதிகளில் உள்ள வாரச்சந்தைகள் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • திரைப்பட படப்பிடிப்புகளில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கையை மாநில அரசு 75 இல் இருந்து 100 ஆக உயர்த்தியுள்ளது. இருப்பினும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • உணவகங்கள் இரவு 9 மணி வரை அமர்ந்து உண்ணவும், இரவு 10 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
  • நகர்ப்புற ரயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கான தடை தொடரும்.

இத்தகைய தளர்வுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here