தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – திருவள்ளுவர் சிலையை காண மார்ச் 6 முதல் அனுமதி!

0
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - திருவள்ளுவர் சிலையை காண மார்ச் 6 முதல் அனுமதி!
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - திருவள்ளுவர் சிலையை காண மார்ச் 6 முதல் அனுமதி!

தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி இருக்கிறது. அங்கு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வருகிற மார்ச் 6 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

திருவள்ளுவர் சிலை

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத்தலமாக இருக்கிறது. இங்கு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் உப்பு காற்றால் சேதமடைய வாய்ப்பு இருக்கிறது. அதனை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படும்.

சுற்றுலாப் பயணிகளே உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு – விமான டிக்கெட்டுகள் இலவசம் … மிஸ் பண்ணிடாதீங்க!

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ. 1 கோடி செலவில் 6ஆம் தேதி அன்று ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணி முடிவடைந்து 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வருகிற மார்ச் 6 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, இது குறித்த அறிவிப்பை சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here