
தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி M.P. முன்னெடுப்பில் “கலைஞர் 100” எனும் வினாடி வினா போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவினருக்கும் மூன்று சுற்றுக்களாக போட்டி நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் kalaignar100.co.in என்ற இணையதள வழியில் 45 நாட்களும், நேரடியாக 30 நாட்களும் என 75 நாட்களுக்கு இப்போட்டி நடைபெறும். இந்த “கலைஞர் 100” வினாடி வினா போட்டிக்கு மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இப்போது இருந்தே தயாராகுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவில் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சொந்த வீடு இல்லைன்னு கஷ்டப்படுறீங்களா? மத்திய மாநில அரசுகள் மாஸ் அறிவிப்பு!!!