மாநிலத்தில் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் 10 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடுவதாக கூடுதல் தலைமை செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

அதிகாரிகள் இடமாற்றம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பத்து காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பியாக ஜெயந்த் முரளி அவர்களும், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பியாக அபய் குமார் சிங் அவர்களும், சீருடை பணியாளர் ஐ.ஜியாக மகேந்திர குமார் அவர்களும், திருச்சி போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும், போலீஸ் பயிற்சி பள்ளி ஐ.ஜியாக அருணும், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தரும், காவல்துறை பொது பிரிவு ஐ.ஜியாக ராதிகாவும், காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நிஷாவும், சேலம் நகரம், வடக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக மாடசாமி அவர்களும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here