ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி – காளையர்கள் மகிழ்ச்சி!!

0

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளான மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடைபெற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல்:

கடத்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வர உள்ளது. பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தற்போதே ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்ற கேள்வி மற்றும் எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கான கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டன. தமிழக அரசு இது குறித்த ஒரு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், அடுத்த ஆண்டு எப்போதும் போலவே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான சில வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

டிச.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம், சரக்கு புக்கிங் நிறுத்தம் !!

ஜல்லிக்கட்டில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும். பரிசோதனையில் அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here