நவம்பர் வரை இலவச அரிசி, நகர்ப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் – தமிழக அரசுக்கு பரிந்துரை!!

0

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அக்குழுவினர் தயார் செய்த ஆய்வறிக்கையை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கினர்.

பொருளாதார தாக்கம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியும் பெரும் சரிவை சந்திள்ளது. இதனை சரிசெய்யும் பொருட்டு மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உட்பட 24 பேர் கொண்ட குழு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

100 days rural work
100 days rural work

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின்பு சி.ரங்கராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் பொருளாதார நிலை, கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு செல்லும். 2020-21ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.71% அல்லது மேலும் சரியாலம் என தெரிவித்து உள்ளார். 2 பிரிவுகளாக வழங்கப்பட்ட பரிந்துரையில், முதல் பிரிவில் நிவாரணம் மற்றும் சீரமைத்தல் குறித்து விளக்கப்பட்டு உள்ளது.

வேளாண் மசோதாவிற்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு – எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 8 பேர் சஸ்பெண்ட்!!

அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழகத்தில் தற்போது வரி விகிதங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை. மின் உற்பத்தி கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி திட்டத்தை நவம்பர் வரை நீட்டிக்குமாறு பரிந்துரைத்துள்ளோம். மேலும் கிராமப்புறங்களில் இருப்பதைப் போன்று நகர்ப்புறங்களிலும் 100 நாள் ஊரக வேலைத்திட்டத்தை கொண்டு வர வேண்டும். சுகாதார மற்றும் காவல் துறைக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here