காலை சிற்றுண்டி திட்டம்: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அமலுக்கு வர வேண்டும்., பறந்த கோரிக்கை!!!

0

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் சென்னை, மதுரை என படிப்படியாக செயல்பட்டு வந்த நிலையில் முதல்வர் பிறந்தநாள் (மார்ச் 1) முதல் அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் உப்புமா, கிச்சடி, வெண் பொங்கல் என விதவிதமாக வழங்கப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாத கூட்டத்தில் விடுதலை கட்சி M.L.A. ஆளூர் ஷாநவாஸ் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குடும்ப கஷ்டத்தை மூட்ட கட்டி வைத்த மதன் பாபு.., அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அசத்தல்!!

அதன்படி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எனவே இத்திட்டம் அடுத்த கட்ட நகர்வை விரைவில் தொடங்கும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here