மகளிருக்காக இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி!!

0
மகளிருக்கான இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி!!
மகளிருக்கான இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி!!

சட்டசபையில் நிதிநிலை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், மகளிருக்கான இலவச பயணம் குறித்த விவாதத்தின் போது, இது குறித்த திட்டவட்ட அறிவிப்பு ஒன்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் திட்டவட்டம்:

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் அவர் அமல்படுத்திய முதல் திட்டங்களில் ஒன்று மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த திட்டத்தால் தற்போது தற்போது 61.82 சதவீதம் பெண்கள் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் 2022-202 ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது, மகளிருக்கான இலவச பயணம் குறித்து முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 1,510 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் ஏற்கனவே 48 கோடி நஷ்டத்தில் இயங்கும் நிலையில், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என்பதை எப்படி அறிவிக்க முடியும் என பதிலளித்தார்.

முகப்பிரச்சனை நீங்கி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் தீபிகா – இந்த டைம் விஜய் டிவி இல்ல!

எனவே அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என்பதை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும், தற்போது இந்த திட்டமே மகளிருக்கு நிறைவானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here