மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தமிழக வீராங்கனை…, கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு…, எதிர்ப்புகள் எதிரொலிகள்!!

0
மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தமிழக வீராங்கனை..., கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு..., எதிர்ப்புகள் எதிரொலிகள்!!
மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தமிழக வீராங்கனை..., கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு..., எதிர்ப்புகள் எதிரொலிகள்!!

கால்பந்து வீராங்கனையாகும் கனவுகளுடன் சென்னையை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, உடற்கல்வி பிரிவில் சேர்ந்து பயின்று வந்தார். சமீபத்தில் இவருக்கு காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த பிரச்சனையின் தீவிரம் காரணமாக, கடந்த 7ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அறுவை சிகிச்சை தவறாக செய்யப்பட்டதால், பிரியாவின் கால் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தன. இதனால், உயிருக்கே ஆபத்து வந்து விடும் என்று கூறி தொடர்ந்து 2 அறுவை சிகிச்சைகள் செய்து இவரது வலது காலை மருத்துவர்கள் நீக்கினர். இதையடுத்து, சீக்கிரமாக காம்பேக் கொடுப்பேன் என்று தனது வாட்ஸ்அப் பக்கத்தில் கடைசியாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவரது இந்த இழப்பு தற்போது தமிழம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 474 பேர் கொரோனாவால் பாதிப்பு.., மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

இதையடுத்து, தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர், தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன், பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இவரை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவுவிட்டுள்ளார். இவரது இழப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கூட பிரியாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருத்தமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here