தமிழ்நாட்டுல தக்காளி விலை ஓஞ்சிருச்சு., ஆனா இந்த உணவு பொருள் விலையெல்லாம் எகிறுதே? புலம்பும் இல்லத்தரசிகள்!!!

0

கடந்த சில தினங்களுக்கு முன் தக்காளி விலை உயர்வு உச்சத்தை தொட்டதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது தக்காளி விலை சரிந்து ஓரளவு ஆறுதல் தந்த நிலையில், நல்லெண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த வாரம் ஒரு டின் நல்லெண்ணெய் 6,765 ரூபாயாக இருந்தது, தற்போது ரூ.660 உயர்ந்து ரூ.7,425க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதேபோல் துவரம் பருப்பு ஒரு மூட்டை ரூ.15,500ஆக இருந்தது, தற்போது ரூ.16,500ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பட்டாணி, பாசி பருப்பு, உளுந்து உள்ளிட்டவைகளின் விலை ரூ.100 முதல் ரூ.1,000 வரை உயர்ந்து பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தக்காளி விலை உயர்வின் போது ரேஷன் கடைகளில் விற்பனை செய்தது போல், தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000.., முதல்வர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.., அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here