தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணிகளில் மீன்வளத்துறை ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு பிப்ரவரி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதில், 65 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தேர்ச்சி பெற்ற 65 பேருக்கு தமிழகம் முழுவதும் மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமனத்திற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 5) சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் செம்மொழி விருது, பணி ஆணைகளையும் முதல்வர் வழங்கி உள்ளார்.