Saturday, April 10, 2021

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்?? விறுவிறுவென வந்திறங்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!!

Must Read

கோவையில் இன்று 5 கண்டெய்னர்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தது. இதனால் விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

சட்டசபை தேர்தல்:

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியின் ஆயுட்காலம் வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிகழும் சூழ்நிலைகளை பார்க்கும் பொது தேர்தல் இன்னும் 2 மாதங்களிலே நடைபெறும் போல் இருக்கிறது. இதற்கு சான்று கோவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் தான்.

5 கன்டெய்னரில் வந்த வாக்குப்பதிவு இயந்திரம்:

கோவையில் இன்று 5 கன்டெய்னர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாம் நினைத்தோம் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்று. ஆனால் இதனை பார்த்தால் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் இந்த இயந்திரங்கள் மஹாராஷ்டிராவில் இருந்து அனுபபட்டவை ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த இயந்திரங்கள் கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணி பார்வையிட்டு வருகிறார். மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக நடந்து கொண்டு வருகின்றது.

டீ விற்று ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டும் இளைஞர்!!

மேலும் கோவையில் மொத்தம் 3048 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. ஏற்கனவே கோவையில் 752 வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ளது. மேலும் இன்று 4567 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளது . இந்த பெட்டிகள் அனைத்தையும் கணினியில் பதிவு செய்துள்ளோம்.மேலும் பெங்களூருவில் இருந்து பெல் நிறுவனத்தின் இயக்குனர்கள் இன்னும் 2 நாட்களில் இங்கு வந்து அனைத்து இயந்திரங்களையும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சான்றிதழ்களை வழங்குவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

சென்னை விரைகிறது தேர்தல் ஆணையம்:

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் 2 நாட்கள் பயணமாக சென்னை வர உள்ளனர். இதில் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான இந்த குழுவில் துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீ வத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலே மல்லிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கட்சித் தலைவர்களுக்கு தெரிந்ததா தேர்தலின் தேதி??

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது மிசன் 200 என்ற பெயரில் 200 தொகுதிகளை வெல்ல திமுக திட்டமிட்டுள்ளது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் விரைவில் வரப்போவதால் என் பிரச்சாரத்தை தொடங்கி விட்டேன் என்று கூறினார். இதன்மூலம் இந்த இரு கட்சி தலைவர்களுக்கு தேர்தல் தேதியை பற்றி முன்பே தெரிந்திருப்பது போல் தெரிகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

விஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -