தமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைவாக இருந்துள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு பதிலளித்து இருந்தது. இதனை தொடர்ந்து அவசர கூட்டம் கூட்டப்பட்டதில் வினாடிக்கு 5,000 கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறந்து விடுவதாக முடிவு செய்யப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தற்போது இருப்பு குறைவாக உள்ளதாக கூறி தண்ணீர் திறந்து விடுவதை காலக்கெடு முடிவடைவதற்குள்ளேயே கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இதனால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. இதையடுத்து வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 டிரென்டிங்க்: இனி மாதந்தோறும் இந்த தேதியில் தான் கிடைக்கும்?