மாவட்டங்கள் இடையே செல்ல இ-பாஸ் தேவையில்லை – தமிழக காவல்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இ-பாஸ் அவசியம் இல்லை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவாக 27000த்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் நேற்று ஒரே நாளில் 250ஐ நெருங்கியது. இதையடுத்து தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்த வண்ணம் உள்ளதை, கருத்தில் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, நேற்று  முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாவட்டங்கள் இடையே மற்றும் மாவட்டங்களுக்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடையில்லை. அப்படி செல்லும் மக்கள் இபாஸ் எடுக்க அவசியம் இல்லை என அறிவிப்பு ஒற்றை விட்டது. ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காக பயணம் செய்வோர் கட்டாயம் முறையான சான்றிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here