முதலீட்டாளர்களுக்கு சிறந்த தொழில் மாநிலம் தமிழகம் – முதல்வர் பெருமிதம்!!

0

சிறந்த தொழில் வளர்க்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருவதாகவும், தொழில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பெருமிதம்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது.  இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தமிழகத்தின் தொழில் துறையில் குறிப்பிட்ட பல மாற்றங்கள் நடந்து வருகிறது.  இது  மட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தலைமையில் பல சிறப்பு முன்னேற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.


இது மட்டுமல்லாமல், தொழில்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் மாநாடும் அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.  இந்த ஆண்டு, கொரோனா பரவலால் இந்த தொழில் துறை மாநாடு நடத்தப்படாமல் உள்ளது.  விரைவில் இந்த ஆண்டுக்கான தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது போக, இந்த மாநாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், இங்கு பல வேலை வாய்ப்புகள் அமையும் என்பது உண்மை.

தற்போது, இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், தொழில் செய்வதற்கு ஏற்ற, வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழகம் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மின் வசதி மற்றும் திறன்மிகு பணியாளர்கள் என முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒற்றை சாளர முறை பின்பற்றப் படுவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here