சென்னையில் மர்ம நபர் தீக்குளிப்பு – முதல்வர் வீட்டின் அருகே நடந்த பயங்கரம்!!

0

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டின் அருகே அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க வெற்றிவேல் எனும் நபர் தீக்குளித்து தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

முதல்வர் வீட்டின் முன் பயங்கரம்:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வீடு சென்னை தேனாம்பேட்டை அருகில் செனடாப் சாலையில் அமைந்துள்ளது.  இந்த நிலையில், அவரின் வீட்டின் அருகே, பயங்கர சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது.  அதாவது, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய  வெற்றிவேல் எனும் நபர் முதல்வரின் வீட்டின் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீவிர தீ காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலீசார் அவரிடம், நடத்திய விசாரணையில் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால், இந்த தேர்தலில் போட்டியிட விடாமல் சிலர் தடுப்பதாகவும் கூறினார்.  அதனால் தான், தாம் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here