‘நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறேன்’ – முதல்வர் பழனிசாமி பேட்டி!!

0

கடலூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தபின் மக்களிடம் பேசிய முதலமைச்சர், வெள்ள சேதாரங்கள் மற்றும் அதற்கான நிவாரணம் பற்றியும்,டெல்லி விவசாயிகள் போராட்டங்கள் பற்றியும், சென்னை- சேலம் 8வழி சாலை குறித்தும் பேசினார்.

நிவர் மற்றும் புரவி புயல் சேதாரங்கள்:

முதலமைச்சர் பழனிசாமி நேற்று புரவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதாரங்களை பார்வையிட்டார். இன்று நாகை மாவட்டத்தில் வெள்ள சேதாரங்களை பார்வையிட்டபின் வேளாங்கண்ணி ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார். பின் நாகூர் தர்காவில் வழிபட்டார்.

அண்மையில் பெய்த கனமழையால் தர்காவின் குளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் அப்போது ஆய்வு செய்தார். பின்னர் கருங்கன்னி பகுதிக்கு சென்று, மழையால் சேதமான பயிர்களை ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் ஆய்வுக்குப்பின், திருவாரூர் சென்ற முதலவர், கொக்காலக்குடியில் சேதமடைந்த பயிர்களை வயலில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற அவர் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தென்னவராயன் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் வெள்ள சேதங்கள் பற்றி பேசினார் அதில் அவர் கூறியதாவது,

“விடுபட்ட பகுதிகளிலும் புயல், மழை சேதங்கள் கணக்கெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். நிவர் புயல் போன்றே, புரெவி புயல் பாதிப்புகளையும் ஆய்வு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும் நோய் பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 492 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன” என கூறினார்.

861 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்ற கட்டிடம்!!

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் பேசினார். 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்? விவசாயிகளுக்கு நன்மை தரும் சட்டங்களை மட்டுமே அதிமுக ஆதரிக்கும். புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் முற்றிலும் ஒழியும். விவசாயிகள் விரும்பினால் மட்டுமே வேளாண் சட்டத்தின் பயனை பெற முடியும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

டெல்டா விவசாய பகுதிகளில் குறைந்தபட்ச ஆதார விலை தற்போது அமலில் தான் உள்ளது. இடைத்தரகர்கள் இன்றி விளைபொருட்களை விற்பனை செய்யும் ஒரே மாநிலம் தமிழகம் தான். விலை பொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறேன்” எனவும் கூறினார்.

மேலும் சென்னை-சேலம் 8 வழி சாலை பற்றி பேசிய அவர், “விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம். 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு .8 வழிச்சாலை என்பது நீண்டகால திட்டம். இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகள் ஆகும். நாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம். வெளிநாடுகளில் குறைந்ததே 8 வழிச்சாலைதான் உள்ளது” எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here