தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பாதித்த 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் இதுவரை 5,69,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 9,148 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் தகவலாக 5,13,836 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் தடுப்பு செயல்முறைகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Chief Secretary of Tamil Nadu Shanmugam
Chief Secretary of Tamil Nadu – Shanmugam IAS

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் செப்டம்பர் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.  இதற்கிடையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமை செயலாளர் சண்முகம் தற்போது காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அக்டோபர் 5 வரை கடைகள் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தஞ்சை, திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஊரடங்கில் கட்டுபாட்டுக்களை மேலும் கடுமை ஆக்குவது, தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here