தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 – என்னென்ன அறிவிப்புகள்?? Live Update

0

தலைமை செயலகத்தில் இன்று பட்ஜெட் 2023-24 க்கான கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக போகிறது என்று மக்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை புரிந்துள்ளனர். மேலும், அதிமுக கட்சியின் மூத்த தலைவரான ஓ.பன்னீர் செல்வம் தலைமை செயலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். தற்போது நவீன முறையிலான இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் தாக்கல் செய்யும் தருவாயில் அதிமுகவினர் சட்டசபையில் பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு பழனிவேல் தியாகராஜன் தனது உரையுடன் பட்ஜெட் தக்காலை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 – Live Update

மார்ச் 20, மணி 12.15
 • தமிழகத்தில் புதிதாக போக்குவரத்துக்கு கீழ் 1000 பேருந்துகள் வாங்கப்படும் என்றும் மகளிர் இலவச பயணத்திற்கு 2,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
 • மதுரையில் மெட்ரோ திட்டத்திற்கு 8500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 20, மணி 12.10  பழனிச்சாமி வெளிநடப்பு
 • கல்வியில் பின்னடைவு குறித்த சில பிரச்சனையை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு செய்துள்ளார்.
மார்ச் 20, மணி 12.00 
 • முதியோர் ஓய்வூதியதிற்கு ரூ.5346 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 • விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ. 2,393 கோடி நிதி ஒதுக்கீடு
மார்ச் 20, மணி 11.58 
 • பத்திரப்பதிவு கட்டணம் 4% லிருந்து 2% ஆக குறைக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு கட்ட முன்பணம் ரூ.50 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20, மணி 11.55 முதியோர் ஓய்வூதியம்
 • செங்கல்பட்டு, ஈரோடு என மேலும் 3 பகுதிகளில் 1 லட்சம் சதுரடியில் நியோ டைட்டில் பார்க் உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்ச் 20, மணி 11.50
 • மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20, மணி – 11.44 பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க
 • பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 20, மணி – 11.37 தொழில் துறைக்கு ரூ.3200 கோடி நிதி ஒதுக்கீடு
 • தொழில் துறைக்கு ரூ.3200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன்அறிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 11.30 மெகாவாட் திட்டம்
 • 2030 ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மெகாவாட் திட்டம். இதற்கு 77,000 ஒதுக்கீடு செய்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 11.27 மகளிர் சுயஉதவி
 • மகளிர் சுயஉதவி குழுவிற்கு 30,000 கோடி வரை கடன் தொகை வழங்க இலக்கு
மார்ச் 20, மணி – 11.23 மெட்ரோ திட்டம்
 • அவிநாசி, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கி கோயம்புத்தூரில் ரூ.9000 கோடியில் மெட்ரோ திட்டம்
மார்ச் 20, மணி – 11.20 கடலோர பகுதிகளுக்கு 
 • கடலோர பகுதிகளுக்கு கடல்நீர் அரிப்பை தடுக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மறுசீரமைப்பு திட்டம்
மார்ச் 20, மணி – 11.11சென்னை வெள்ள நிவாரணம்
 • ரூ.320 கோடி சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ஒதுக்கப்ட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 11.03 அடையாறு-கூவம் ஆறுகளை மேம்படுத்த
 • அடையாறு-கூவம் ஆறுகளை மேம்படுத்தவும், சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20, மணி – 11.02 கிராமப்புற சாலைகள்
 • 2024 ஆம் நிதியாண்டில் 5,140 கி.மீ.க்கு மேல் உள்ள கிராமப்புற சாலைகள் அமைக்க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மார்ச் 20, மணி – 11.01 மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம்
 • ரூ.25 கோடி செலவில் மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்கப்படும்.
மார்ச் 20, மணி – 10.58 
 • தங்கம் மற்றும் கல்விக்கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்ய ரூ.3,993 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 10.55 சைக்கிள் வழங்கும் திட்டம்
 • பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.305 கோடி ஒதுக்கீடு.
மார்ச் 20, மணி – 10.50
 • பொது விநியோக திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
மார்ச் 20, மணி – 10.40 காலை உணவுத்திட்டம்
 • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 10.30 என்றும் எழுதும் திட்டம்
 • என்றும் எழுதும் திட்டத்தில் 4 முதல் 5 வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்றும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கீழ் இயங்கும் எல்லா பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறைக்கு கீழ் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ரூ.40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20, மணி – 10.25
 • அம்பேத்கர் படைப்புக்களை தமிழில் மொழி பெயர்க்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாடு வருவாய் பற்றாக்குறை 62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டதாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 10.23
 • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 20, மணி – 10.16
 • தஞ்சாவூரில் சோழர் அருகாட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் முதல் அறிவிப்பை பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here