தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று துவக்கம் – முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு!!

0
இனி ஒவ்வொரு ஆண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் - அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க செலுத்தபடும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார்.

பூஸ்டர் டோஸ் :

தமிழகத்தில் டெல்டா கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த தொற்று பரவலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், 60 வயதுக்கு மேலான முதியவர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் என அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் அண்மையில் அறிவித்தார்.

இதனை அடுத்து, 2 டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இரண்டு தவணையாக எந்த தடுப்பூசி செலுத்தி கொண்டார்களோ அதே தடுப்பூசியே பூஸ்டர் டோஸாக செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று துவக்கி வைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here