தமிழக பாஜக பிரதிநிதிகள் அறிவிப்பு – கவுதமி, நமீதாவிற்கு பதவி!!

0

தமிழக பாஜக கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் வெளியிட்டுள்ளார்.

துணை தலைவர் , பொது செயலாளர் பிரிவு..!

பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன், எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழக பா.ஜக., பொது செயலாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டார்.

மீனவர், நெசவாளர் பிரிவு..!

மாநில இளைஞரணி தலைவராக வினோஜ் செல்வம், மாநில மீனவ பிரிவு தலைவராக சதீஷ்குமார், நெசவாளர் பிரிவு தலைவராக பாலமுருகன், மருத்துவ பிரிவு தலைவராக விஜய்பாண்டி, தமிழ்வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் பிரிவு தலைவராக ஆதித்யா கோகுலகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளராக நாகராஜன், ஊடக தொடர் பிரிவு தலைவராக பிரசாத், சிறுபான்மை அணி தலைவராக ஆஷீம்பாஷா, விவசாய அணி தலைவராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மாநில செயலாளர்களாக..!

மாநில செயலாளர்களாக கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள்..!

மாவட்ட செயலாளர்களாக திருச்சி புறநகர் எஸ்.ராஜேந்திரன், கடலூர் கிழக்கு ஜி.மணிகண்டன், சேலம் மேற்கு எஸ்.சுதிர் முருகன், கோவை தெற்கு என்.வசந்தராஜன், நீலகிரி எச்.மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற பிரிவுகள்..!

பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக நிர்மல் குமார், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ், மாநில அலுவலகச் செயலர் எம்.சந்திரன், இணைப் பொருளாளர் சிவ.சுப்பிரமணியன் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த தாஸ் பாண்டியனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, சவுதாமணி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here