
நாட்டில் மின் இணைப்புகள் மூலம் எவ்வித அசம்பாவிதங்கள் ஈடேறாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைத்து வீட்டிற்கும் தரைத்தளத்தில் ஒரே இடத்தில் மின் இணைப்புகள் வழங்க பட்டு இருப்பதால், எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் ஒவ்வொரு தளத்திலும் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர்களை அமைக்க வேண்டும் என தேசிய மின் ஆய்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி கட்டிடங்கள் 5 மாடிக்கு (49 மீட்டர்) மேல் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு தளத்திலும் மின்சார மீட்டர், மெயின் பாக்ஸ் அமைக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.