தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு?? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ள நிலையில் செப்.25 முதல் அல்லது கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு??

தமிழகத்தில் இதுவரை 5,47,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 8,871 பேர் உயிரிழந்து உள்ளனர். 4,91,971 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் தவிர பிற அனைத்து சேவைகளும் தொடங்கி விட்டன. இ-பாஸ் ரத்து, பேருந்து பொதுப்போக்குவரத்து அனுமதி என தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மறுபுறம் கொரோனா தொற்று எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

chennai lock down
chennai lock down

இந்நிலையில் செப்.25 முதல் அல்லது அதற்கு முன்னராக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் பொதுமக்கள் குழம்பிப்போய் உள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தும் ஒரு காரணம் – மத்திய அரசு விளக்கம்!!

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அதனை மீறிய 50 ஆயிரம் பேரிடம் இருந்து இதுவரை 1.50 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது என தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here