தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு – இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்!!

0

தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி தற்போது காலமாகியுள்ளார். இவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன், இவர் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநராக தற்போது செயல்பட்டு வருகிறார். இவரின் தாயார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் மனைவி கிருஷ்ணகுமாரி இன்று காலை காலமாகியுள்ளார்.

 

இந்த செய்தியை தமிழிசை சவுந்தரராஜன், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இவரது தாயாரின் உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இவரின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “உற்ற துணை இழந்து வாடும் குமரி அனந்தன் அவர்களுக்கும், தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here