Wednesday, April 24, 2024

மீண்டும் முதல்வர் பதவிக்காக போராடும் ஓபிஎஸ் – நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவில் பல கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல்:

வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் எல்லா கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியலில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று பெரும் குழப்பம் உண்டாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் தான் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்த கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்று இன்னும் கட்சியில் முடிவு செய்யப்படாமல் பூசல் உருவாகியுள்ளது. நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் கூட தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மோதிக் கொண்டனர். துணை முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் தனக்கு முதல்வர் வேட்பாளர் தகுதி தரப்பட வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார்.

அதற்கு தகுந்தாற்போல் தற்போது வகித்து வரும் துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வராக ஆட்சியில் இருக்கும் பழனிசாமியும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சி உறுப்பினர்களிடையே வலியுறுத்தி வருகிறார்.

நாளை செய்தியாளர்கள் சந்திப்பு:

இவர்கள் இருவருக்கும் என்று தனியாக ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர். வரும் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. இப்படியாக இருக்க இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சிலர் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

அதற்கு பன்னீர்செல்வம் நாளை செய்தியாளர்களை சந்தித்து பதில் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று தெரிகிறது. பன்னீர்செல்வம் மீண்டும் தனக்கு முதல்வர் பதிவு கிடைக்க போராடுவார் என்று தெரிகிறது. அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டு தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -