திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் – அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!

0
திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் - அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!
திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் - அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!

கடல் கடந்து சென்று தமிழின் பெருமையை நிலைநாட்டிய தமிழர்களின் செயல்கள் குறித்து வெளிநாட்டிலும் ஆய்வு நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கடல் கடந்து ஆய்வு:

சங்க காலத்தில் தமிழர்கள் வணிகத்தில் மிக சிறந்த விளங்கியுள்ளனர். இதனால், தான் தமிழ் பாட்டி ஒளவை “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” எனப் பாடியுள்ளார். அவர்களின் கடல் கடந்த இந்த வாணிபத்தில் தமிழரின் பெருமை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல், இவர்களின் இந்த பண்டமாற்று முறையானது, இன்றைக்கு ஏற்றுமதி, இறக்குமதி என்ற பெயரில் உலகம் முழுவதும் நடந்து வருவது கவனிக்க தகுந்தது. இது மட்டுமல்லாமல், சில தமிழர்கள் வெளிநாடு வரை சென்று தமிழின் பெருமையை பறை சாட்டியுள்ளனர்.

திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் - அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!
திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் – அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!

இது குறித்த விவாதம் இன்றைக்கு சட்டசபையில் நடந்துள்ளது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கடல் கடந்து தமிழர்கள் கால் பதித்த வெளி நாடுகளிலும் அவர்களின் செயல் குறித்து அறிய தொல்லியல் துறையின் மூலம் அயல்நாடுகளிலும் ஆய்வு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் - அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!
திரைகடல் தாண்டி கால்பதித்த தமிழர்கள் – அயல் நாடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு!!

மேலும், பிரமிடுகள் நிறைந்துள்ள எகிப்து நாட்டின் குசிர்- அல்- காதில் பகுதி, ஓமன் நாட்டின் கோர் ரோரி பகுதி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆய்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். இது தமிழரின் பெருமையை தரணி அறியச் செய்யும் செயல் என பொது மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here