தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆண்மை இருக்கா? – பிகில் படத்தை கலாய்த்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!!

0

சென்னையில் நடைபெற்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் பிகில் படத்தை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தயாரிப்பாளர் விமர்சனம்:

சென்னையில் நேற்று கண்மணி பாப்பா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், தமன் குமார், சிங்கம் புலி,  சந்தோஷ் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்ற பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும்,கேரளாவில் நடந்த ஒரு பட பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிக சம்பளம் கேட்ட நடிகருக்கு அந்த மாநிலத்தின் நடிகர் சங்கம் ரெட் கார்டு போட்டது. அதே போல்,இங்கே செய்ய இங்குள்ள சங்கத்தினருக்கு ஆண்மையிருக்கா? என பயங்கரமாக விமர்சித்துள்ளார்.

அதாவது தயாரிப்பாளர்களுக்கு தெரிந்து, இயக்குனர்கள் எதையும் செய்வதில்லை எனவும், தயாரிப்பாளர்களின் வேலை படத்திற்கான செலவுகளுடன்  நின்றுவிடுகிறது என பேசியுள்ளார். மேலும், பிகில் சின்ன படம், அது நஷ்டமடைந்த படம். மேலும் தன்னை பொறுத்தவரையில் வெற்றி பெரும் படங்கள் மட்டுமே பெரிய படம் என பேசியுள்ளார். இவர் பேசியுள்ள இந்த பேச்சு, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here