பழம்பெரும் நடிகர் திடீர் மறைவு – சோகக் கடலில் மூழ்கிய திரையுலகம்!!

0

தமிழ் சினிமாவில் முக்கிய அரசியல்வாதி மற்றும் மேடை கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகர் பாரதி மணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

நடிகர் இறப்பு:

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் நடிகர் பாரதி மணி. தமிழ் திரையில் பல முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், அரசியல்வாதியாக பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். பாபா, பாரதி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களின் மூலம் தனக்கான இடத்தை ரசிகர்களிடம் பெற்றுள்ளார். திரைத்துறை மட்டுமல்லாது, இலக்கிய உலத்திலும் தன் முத்திரையை பதித்துள்ளார்.

அவர், டெல்லியில் பல மேடை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். இது மட்டுமில்லாமல் இவர் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் எனும் புத்தகம் இலக்கிய உலகத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. 84 வயதான பாரதி மணி உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.  அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் எழுத்தாளர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here