Friday, March 29, 2024

இன்றைய முக்கிய செய்திகளின் சுருக்கம் – மறக்காம படிங்க!!

Must Read

தேசிய செய்திகள்:

  • நாடு முழுவதும் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் முறைகேடுகளை தடுக்கும் வகையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்றும் அதனை வாடிக்கையாளர்கள் தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் முறை அமலுக்கு வர உள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் இளநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதியாக நவம்பர் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொது முடக்கத்திற்கு பின் முதல் வெளிநாடு பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டாக்காவில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க உள்ளார். பங்களாதேஷ் அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்கவுள்ளார்.

மாநில செய்திகள்:

  • யுஜிசி வழிகாட்டுதல்களின் படி அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இன்ஜினியரிங் இறுதிப்பருவ மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, காரணம், அவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து அவரது தயார் மறைவிற்கு இரங்கலை தெரிவித்தார். மேலும் தனது ஆறுதலைகளையும் தெரிவித்தார்.
  • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
  • தமிழகத்தில் உள்ள தென் மாவட்ட மக்களுக்காக ரயில்வேத்துறை சார்பில் 3 சிறப்பு ரயில்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது. மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள்:

  • சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து உயர்ந்து ரூ.4,690 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.40 ஆக உள்ளது.

வானிலை ரிப்போர்ட்:

  • சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்காள விரிகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

  • கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் தோலில் 9 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியதாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற 40 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
  • தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே போல் முதல்வரின் ஆலோசனை பெற்ற பின் தான் அது குறித்து கூற முடியும் என்றும் கூறியுள்ளார்.
  • அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் 26 ஆம் தேதி முழு வேலை நிறுத்தம் என்று அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற இருக்கும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி தலைமை தங்க உள்ளார்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 4 தேர்வில்  வெற்றி பெற இத பண்ணுங்க.., உங்களுக்கான மாஸ் அறிவிப்பு இதோ!!!!

TNPSC குரூப் 4 தேர்வில்  வெற்றி பெற இத பண்ணுங்க.., உங்களுக்கான மாஸ் அறிவிப்பு இதோ!!!! தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள VAO, தட்டச்சர் உள்ளிட்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -