ஊரடங்கின் பொழுது கோவில் பூஜைகளுக்கு அனுமதி – தமிழக முதல்வர் அதிரடி!!

0

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் ஊரடங்கு காலத்தில் கோவில்களில் பூஜைகள், பிரார்த்தனைகள் போன்ற வழிபாடுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவில் பூஜைகள்:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை மருத்துவர்களின் கட்டுக்குள் வராமல் அதனை மீறி மக்கள் அனைவரையும் மிக அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணாமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஊரடங்கின் பொழுது எதற்கெல்லாம் தளர்வுகள் என்றும் எதற்கெல்லாம் தடை என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு எதிரொலி – தமிழகத்தில் 24 மணி நேரம் போக்குவரத்து இயங்க அனுமதி!!

அதன்படி தமிழகத்தில் ஊரடங்கின் பொழுது வழிபட்டு தளங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளை வழிபாட்டு தல ஊழியர்கள் வழக்கம் போல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குடமுழுக்கு மற்றும் கோவில் திருவிழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here