தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஒருவர் சர்வதேச இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
கால்பந்து:
கடந்த ஆண்டு கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர், ரசிகர்களின் ஆரவாரத்துடன் விமர்சியாக நடைபெற்றது. இதன் மூலம்,விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள பலர், கால்பந்து போட்டிகளின் தீவிர ரசிகர்களாக மாறினர். இதனை தொடர்ந்து, இந்திய ரசிகர்கள், இந்தியன் சூப்பர் லீக் தொடர் மீதும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த இந்தியன் சூப்பர் லீக் தொடரானது, தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இறுதிப் போட்டியில், பெங்களூரு மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் வரும் 18ம் தேதி மோத இருக்கின்றன. இதில், பெங்களூரு அணிக்காக, தமிழ்நாட்டின் சிவகங்கையை சேர்ந்த சிவசக்தி நாராயணன் தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 500 நாட்களே…, கவுண்ட்டவுனை அறிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி!!
இவரது திறமைக்கு ஏற்றாற் போல, தற்போது இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், மணிப்பூர் மற்றும் இம்பாலில் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.