தொடர்ந்து 4 சதங்கள் அடித்த தமிழக வீரர்…, உலக அளவில் சாதனை படைத்து அசத்தல்!!

0
தொடர்ந்து 4 சதங்கள் அடித்த தமிழக வீரர்..., உலக அளவில் சாதனை படைத்து அசத்தல்!!
தொடர்ந்து 4 சதங்கள் அடித்த தமிழக வீரர்..., உலக அளவில் சாதனை படைத்து அசத்தல்!!

ஹரியானா அணிக்கு எதிராக தமிழ்நாடு அணியின் நாராயண் ஜெகதீசன் சதம் அடித்து விஜய் ஹசாரே டிராபியில் தொடர் சதங்களை குவித்து சாதனை படைத்து உள்ளார்.

நாராயண் ஜெகதீசன்:

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான, விஜய் ஹசாரே டிராபி 38 அணிகளுக்கு இடையே கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று தமிழ்நாடு அணி ஹரியானா அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், டாஸ் வென்ற ஹரியானா அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், தமிழ்நாடு அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும், சிறப்பாக செயல்பட்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானா அணியை அபாரமாக வீழ்த்தியது. இதில், தமிழ்நாடு அணியின் தொடக்க வீரரான நாராயண் ஜெகதீசன், தலா 6 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 128 ரன்கள் அடித்து அசத்தினார். இவர் இந்த தொடரில், இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளிலும் 114*, 107 மற்றும் 168 என தொடர் சதங்களை அடித்துள்ளார்.

ராதிகாவை படாதபாடு படுத்தும் ராமமூர்த்தி.., இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ!!

நேற்று நடந்த போட்டியிலும் தனது ஹாட்ரிக் சாதனையை தொடர்ந்து நான்காவது சதம் (128) அடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது, தொடர்ந்து 4 சதங்களை அடித்த உலகின் 4வது வீரராக திகழ்கிறார். இதற்கு முன், இலங்கையின் சங்கக்கார, தென் ஆப்பிரிக்காவின் அல்விரோ பீட்டர்சன், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதே போல, விஜய் ஹசாரே டிராபியின் ஒரே சீசனில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லியுடன் நாராயண் ஜெகதீசன் சமன் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here