தமிழகத்தில் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 & 8 கிராம் தங்கம்., அருமையான 4 திட்டங்கள்!!!

0
தமிழகத்தில் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 & 8 கிராம் தங்கம்., அருமையான 4 திட்டங்கள்!!!

தமிழகத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் ஒரு சில நலத்திட்டங்கள் செயல்பட்டு வருவது குறித்து பலருக்கும் தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நல விரிவாக்க அலுவலர் திலகவதி அவர்கள், பெண்களின் திருமண நிதி உதவிக்கான 4 திட்டங்களை விவரித்துள்ளார்.

அதன்படி,

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்:

இத்திட்டத்தின் மூலம் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ. 25,000மும், 2 பெண் குழந்தை இருந்தால் ரூ. 50,000மும் வழங்கப்படும். அந்த தொகையை பெற, பெண் குழந்தைகள் திருமண வயதை எட்டி இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளிட்ட சில தகுதிகளை வரையறுத்து உள்ளனர்.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற திருமண நிதியுதவி திட்டம் & ஈவேரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்:

இத்திட்டங்களிள் மூலம் ஆதரவற்ற அல்லது தந்தையை இழந்த பெண்களின் திருமணத்திற்கு, நிதியுதவியாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். அந்த பெண் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்து இருந்தால் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். இதற்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை வரையறுத்துள்ளனர்.

டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம்:

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவியாக ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம். அதே பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்து இருந்தால் ரூ.50,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். இதில் பயன்பெற திருமணத்தின் போது பெண்ணுக்கு வயது 20, மணமகனுக்கு வயது 40க்குள் இருக்க வேண்டும் போன்ற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரும், மற்றொருவர் இதர வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதேபோல் திருமண வயதை எட்டி இருப்பதோடு குறைந்தபட்சமாக 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் ரூ.25,000மும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படும். அதேபோல் உயர்கல்வி முடித்தவராக இருந்தால் ரூ.50000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here