தமிழக – கேரள எல்லையில் தீவிரப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் – சான்றிதழ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பும் சுகாதாரத்துறை!!

0

கேரளாவில் கொரோனா நோய் தொற்று தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதுவும் கடந்த வாரம் ஓணம் பண்டிகையால் விடப்பட்ட விடுமுறையால் புதன்கிழமை கேரளாவில் 30,000 ஐ கடந்து தொற்று பதிவாகியது. இதனால் தமிழக – கேரள எல்லையில் தொற்று பாதிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் கேரளாவின் அண்டை மாநிலம் என்பதால் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் மூலம் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இரு மாநில எல்லைகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 2008 பேருக்கு டெங்கு...

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்தி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் இ-பதிவு சான்றிதழ்கள்களை சரிபார்த்த பிறகே சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கின்றனர்.

அதே போல் தேனி மாவட்டத்தில் குமுளி, போடி மெட்டு, கம்பம் மெட்டு, மற்றும் கோயம்புதூரில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here