தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு – கூடுதல் கட்டுப்பாடுகளால் தவிக்கும் மக்கள்!!

0
தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு - கூடுதல் கட்டுப்பாடுகளால் தவிக்கும் மக்கள்!!
தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு - கூடுதல் கட்டுப்பாடுகளால் தவிக்கும் மக்கள்!!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கானது தளர்த்தப்பட்டது. மக்களின் நடமாட்டத்தால் கேரளாவில் ஒருநாள் பாதிப்பானது 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை தற்போது அறிவித்துள்ளது கேரளா அரசு.

கூடுதல் கட்டுப்பாடுகள் :

நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோனா நோயானது கோரத்தாண்டவமாய் இருந்து வந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்து வந்தது. உயிரிழப்பு குறைப்பதற்க்காக தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்துமாறு அறிவுறுத்தி வந்தனர். கேரளாவில் தற்போது பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக புதிதாக பாதிப்பு எண்ணிக்கையானது 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.

கூடுதல் கட்டுப்பாடுகள் :
கூடுதல் கட்டுப்பாடுகள் :

இந்நாட்டின் மொத்தப்பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும். இதற்கு காரணம் கேரளாவில் ஓணம் மற்றும் சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் என்று கூறப்படுகிறது. இந்த தளர்வுகளால் சுற்றுலா மையங்கள் மற்றும் மால்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் கேரளாவில் கொரோனாவின் பாதிப்பானது நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. மேலும் மலையோர மாவட்டங்களில் நோயின் பரவலானது அதிகமாக இருப்பதாக சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி கேரள – தமிழக எல்லையில் கட்டுப்பாடுகளானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here