தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அப்டேட்!!!

0
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அப்டேட்!!!

தமிழக தொடக்க கல்வித்துறையில், கடந்த 2009 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரு தினங்களில் பணியமர்த்தப்பட்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியத்தில், ரூ.3,170 வரை வேறுபாடு உள்ளது. இதனால் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும் என நீண்ட காலமாக இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 5 தினங்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் இணையும் அயலான் காம்போ.. இணையத்தில் கசிந்த SK 27 படத்தின் முக்கிய அப்டேட்!!

இன்னும் ஓரிரு நாட்களில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால், வரும் 26ஆம் தேதி தலைநகர் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “இதற்கு முன்னதாகவே ஆசிரியர் சங்கங்களை நேரில் சந்தித்தும், அழைத்தும் பேசி உள்ளோம். நிதிநிலை சீரான பிறகு, கோரிக்கைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஆசிரியர்களின் உரிமைக்கு நாங்கள் என்றைக்கும் மரியாதை கொடுப்போம். ” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here