இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடு – தமிழகம் முதலிடம்..!

0

இந்தியாவிலேயே ஊரடங்கு காலகட்டத்தில் அதிக புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் முதலிடம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலகட்டமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மும்பையில் உள்ள புராஜக்ட்ஸ் டுடே என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு கடந்த மே மாதம் மட்டும் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது. அதிக முதலீடுகளைக் குவித்த முதல் 10 மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மராட்டியம் ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

இன்போசிஸ் நிறுவனத்தின் 2020 ஜூன் காலாண்டு மதிப்பு – ரூ.4,233 கோடி வருவாய்..!

புராஜக்ட்ஸ் டுடே அறிக்கை..!

இது குறித்து புராஜக்ட்ஸ் டுடே அறிக்கையின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாத வரையிலான காலகட்டத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான முதலீட்டுக்கான ஆயிரத்து 241 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதங்களில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான 2500 புதிய முதலீட்டுத் திட்டங்கள் கையெழுத்தானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here